Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கன்னி 

   (உத்திரம் 2ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2ஆம் பாதம் முடிய)   

    

அனைவரிடமும் சகஜமாக பழகினாலும் அளவோடு தன்மையுடன் பேசும் குணம்  கொண்ட கன்னிராசி நேயர்களே  உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆண்டு கோளான குருபகவான் தன ஸ்தானமான 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்தை எல்லாம் நிறைவேற்றி கொள்ள முடியும். பணவரவுகள் சிறப்பாக  இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கூடிய வாய்ப்பும், சர்ப்ப கிரகமான ராகு 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுகுள்ள பிரச்சனைகள் குறைந்து லாபமும் அபிவிருத்தியும் பெறக்கூடிய அமைப்பும் கொடுக்கும். இந்த 2018 ஆம் ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் தேவையற்ற அலைச்சல், டென்சன் எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை நேரத்திற்கு உணவு உன்ன இயலாத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள்  கௌரமான பதவிகளையும், ஊதிய உயர்வுகளையும் பெறுவார்கள். சிலருக்கு நினைத்த இடத்திற்கு மாற்றமும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள் . வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு, பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். பிரிந்து சென்ற உறவினர்களும் ஒற்றுமை பாராட்டுவார்கள். உடல்நிலையும் ஓரளவுக்கு சிறப்படையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். 11.10.2018 முதல் குரு  3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆண்டின் இறுதியில் கொடுக்கல் வாங்கலில்  சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்

    அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று செவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும். பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். 

வாழ்க வளமுடன்

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter